மீரா கதிரவன் இயக்கத்தில் கிருஷ்ணா, தன்ஷிகா, விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விழித்திரு’.
இதன் சமீபத்திய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தலைப்பில் “தற்கொலைக்கு முன்பே நாம் அவர்களை கொலைசெய்துவிட்டோம்” என்ற வாசகத்தோடு படம் நவம்பர் 3-ல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாசகம் காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் நேற்று முன் தினம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி பிரச்சினை காரணமாக தீ குளித்த சம்பவத்தை குறிப்பிடுவதைப்போன்று அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது
கந்து வட்டி பிரச்சனையால் தீக்குளித்த சம்பவத்தை குறிக்கிறதா ‘விழித்திரு’ பட போஸ்டர்!
