ஆர்.கே.நகர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகிறதாம்!

mutharasan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: பண மதிப்பிழப்பு திட்டத்தை மோடி அறிவித்த நவம்பர் 8ம் தேதியை  அகில இந்திய அளவில்  18 கட்சிகள் எடுத்த முடிவின்படி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழகத்தில்  கருப்பு தினமாக அனுசரிக்கும்.  சுதந்திரமாக செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட கூடியதாக மாறிவிட்டது. இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. பணம் பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடத்த கூடாது. மீறி அங்கு  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் மதவாத எதிர்ப்பு கட்சிகளோடு கூட்டணி அமைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும்.

ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை நடத்தும் ஆணையம் முறையாக விசாரணை செய்தால் பிரதமர், ஆளுநர், தற்போதைய குடியரசு துணைத்தலைவர், லண்டன், சிங்கப்பூர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களை முதலில் விசாரணை செய்ய வேண்டும். அவர்களால் இதை செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. தற்போது செயல்படாத அரசுக்கு எதிராக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தும் பயணம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.

Leave a Response