போக்குவரத்து விதி மீறலா? அபராதம் கட்ட புதிய வழி- மும்பையில்!

Kalyani_Post_Office_02

மும்பை மாநகரத்தில் ஏராளமான போக்குவரத்து விதிமீறல்களான சிக்னலை மீறுவது, தலைகவசம் அணியாமல் செல்வது,அதிவேகம், காரில் சீட் பெல்ட் அணியால் இருப்பது உள்ளிட்ட பலவிதமான விதிமுறை மீறல்கள் நாள்தோறும் நடக்கின்றன.

இதைக் கண்காணிக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் விதிமீறல்களில் ஈடுபடுவோரின் வாகன எண்ணை குறித்துக் கொண்டு அந்த வாகனத்தின் உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அபராதம் செலுத்தக்கோரும் இ-செலான்களை போலீசார் அனுப்பி வருகின்றனர்.

இதன்படி நாள்தோறும் 5 ஆயிரம் பேருக்கு இ-செலான்களை மும்பை போக்குவரத்து போலீசார் அனுப்பி வருகின்றனர். ஆனால், போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் வகையில் செல்போன் எண்களை சிலர் மாற்றி தப்பித்து விடுகின்றனர்.

இதையடுத்து, இனி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர்களிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க தபால்துறை உதவ உள்ளது.

driving-licences-

இது குறித்து மஹாராஷ்டிரா மற்றும்  கோவா மாநில தபால் நிலையத் தலைவர் எச்.சி. அகர்வால் கூறுகையில், “ போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரிடம் இருந்து அபராதத்தை வசூலித்து கொடுக்க போக்குவரத்து  போலீசாருக்கு உதவு இருக்கிறோம். இது தொடர்பாக அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.

இதன்படி, போலீசார் எங்களுக்கு அனுப்பும் இ-செலான்களை விரைவு, பதிவுத் தபால் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கே சென்று அளிப்போம்.

cell 1

அவர்கள் அபராத செலானை பெற்றுக்கொண்டோம் என்ற ஒப்புகை சீட்டிலும் கையொப்பம் போட வேண்டும்.  அவர்கள் அந்த தபாலைப் பெற்றுக்கொண்டு,  அபராதத் தொகையை அருகில் உள்ள தபால்நிலையத்தில் செலுத்தி விட வேண்டும்.

இந்த தபால்களை நேரடியாக நாங்கள் சம்பந்தப்பட்டவருக்கு கொடுப்பதால் ஏற்படும் கூடுதல் செலவினத்தையும் போலீசார் ஏற்றுக்கொள்வார்கள்.  விதிமுறை மீறலில் ஈடுபட்டவரிடம் இருந்து இந்த கூடுதல் செலவுத் தொகை வசூலிக்கப்படும். இதன் மூலமாவது, போக்குவரத்து விதிமுறை மீறல் குறையும் என நம்புகிறோம்’’ எனத் தெரிவித்தார்.

Leave a Response