தமிழக ஆளுநர் டெல்லி போனது எதற்காக ? இதோ புதிய தகவல்

tamilnadu new gov

குடியரசுத் தலைவர் தலைமையில் கருத்தரங்கு மாநாடு; தமிழக ஆளுநர் பங்கேற்பு!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், அனைத்து மாநில ஆளுநர்கள் கருத்தரங்கம் அக்டோபர் 12 மற்றும் 13 தேதிகளில் நடக்கவிருக்கிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் இந்த கருத்தரங்கு மாநாட்டில் ‘புதிய இந்தியா 2022’ எனும் முழக்கத்தோடு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. முதல் நாளில், புதிய இந்தியா 2022-க்கான சாத்தியக் கூறுகள் குறித்து நிதி ஆயோக் சார்பில் விளக்கப்பட இருக்கிறது.

தவிர, புதிய இந்தியா 2022-க்கான கட்டமைப்பு வசதிகள், புதிய இந்தியா 2022-க்கான மக்கள் சேவைகள் என வெவ்வேறு தலைப்புகளில் ஆளுநர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். மாநாட்டில் தமிழக ஆளுநரும் கலந்துகொள்கிறார்!

இரு தலைப்புகளில் நடைபெறும் விவாதங்களின்போதும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கருத்தரங்கில் பங்கேற்பார்கள்.

13-ம் தேதி நடைபெறும் 2-வது நாள் கருத்தரங்கில், மாநிலங்களில் உயர்கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் 48-வது கருத்தரங்கு இது என்றாலும், குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கருத்தரங்கு இது!

Leave a Response