ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்: அமைச்சர் சிவி.சண்முகம்..!

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளுக்கு வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மேலும், மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் பறிபோனது மக்களின் வாழ்க்கை அல்ல; ஸ்டாலினின் கனவு தான் என்றார்.

Leave a Response