கோவில் வாசலில் பிச்சை எடுத்த வாலிபர் ரஷிய உளவாளியா?

31aaa839-835d-4224-9764-5b1fc0e721bf

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் நேற்று காலை திடீரென வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வாலிபர் ரஷியாவில் இருந்து வந்த உளவாகியாக இருக்க கூடுமென்ற பரபரப்புத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரது மனைவி டாட்யானா. இவர்களது மகன் எவிங்வி பர்த்திகோவ் (26).

கடந்த வாரத்த்தில் பர்த்திகோவ், இந்தியாவில் கோயில்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளை பார்க்க வந்துள்ளார்.இந்தியா வந்த அவர், காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை ஆகியவற்றையும் சுற்றி பார்க்க விரும்பினார். அதன்படி நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வந்த அவர் கோயில்களை சுற்றிப் பார்த்தார்.

அப்போது, அவரது ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க சென்றார். அப்போது, அவரது ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அவர், அந்த கார்டை உடைத்து எறிந்துவிட்டார். பின்னர், பணம் இல்லாமல் வேறு வழியின்றி தவித்தார்.இந்நிலையில், நேற்று காலை சுமார் 7 மணியளவில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு பர்த்திகோவ் சென்றார்.

 

அங்கு, கோயில் நுழைவாயிலில் கீழே உட்கார்ந்த அவர், தனது தொப்பியை கழற்றி கையில் வைத்து கொண்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பிச்சை எடுத்துள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகளவில் வந்த பக்தர்கள் வியப்புடன் வெளிநாட்டு வாலிபர் பிச்சை எடுப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.தகவலறிந்து, சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பர்த்திகோவிடம் விசாரித்தனர்.அதில், ரஷ்ய நாட்டை சேர்ந்த வாலிபர் என்றும் முறையான பாஸ்போர்ட், விசா பெற்று இந்தியா வந்துள்ளதும் தெரியவந்தது. மேலும் செலவுக்கு பணம் இல்லாததால் பிச்சை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவரிடம் பேசிய போலீசார், சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு சென்று தீர்வு காணுமாறு அறிவுரை கூறி அனுப்பினர். மேலும்  போலீசாரே மனிதாபிமானத்துடன் பணம் கொடுத்து சென்னை செல்வதற்காக, அவரை அழைத்து சென்று காலை 10.15 மணிக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்நிலையில் கோவில்  வாசலில் பிச்சை எடுத்த வாலிபர் ஒரு ரஷிய உளவாளி என்றும் அவரைப்பற்றிய சரியான தகவல்களை காவல்துறைப்பெறத் தவறிவிட்டது  என்ற புதிய புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனைக்காவல் துறைத் தரப்பில் உறுதிசெய்யத் தவறிவிட்டார்களா? இல்லை அந்த தகவலை வெளியிட மறுக்கிறார்களா என தெரியவில்லை. ஒருவேளை வந்த தகவல் வதந்தியா என்ற கோணத்திலும் காவல் துறைத்தரப்பில் தற்போது விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Response