விஷாலை எதிர்க்கும் விஜய்! தீபாவளியன்று உறுதியாக வெளியாகிறது ‘மெர்சல்’!

mersal-vijay_03bba372-7d1f-11e7-ba32-a280bea68af6

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் உலகம் முழுவதும் தீபாவளியன்று உறுதியாக வெளியாகும் என்பதையும் எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்ற கூடுதல் தகவலையும்   படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களையும், அதிக லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. அதேபோன்று இன்னொரு உலக சாதனை செய்ய காத்திருப்பதாகவும், அதற்காக டிரைலரை வெளியிடுங்கள் என்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் படக்குழுவினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

7c5a3caf-3ea4-4841-856b-f6dddf40dbca

ஆனால், டிரைலர் இல்லாமல் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கேளிக்கை வரி பிரச்சனையால், ‘மெர்சல்’ படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி தீபாவளி தினத்தில் கண்டிப்பாக வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், உலகம் முழுவதும் ‘மெர்சல்’ படம் எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்பதை படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அறிவித்துள்ளார். அதன்படி ‘மெர்சல்’ படம் உலகம் முழுவதும் சுமார் 3292 ஸ்கிரின்களில் வெளியாக இருக்கிறதாம். இன்னும் இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் கூறியுள்ளார்

Leave a Response