தோல்வியடைந்த அரசு; மோடி பதவி விலக வேண்டும்! -ராகுல் காந்தி வலியுறுத்தல்

rahul

அமேதியில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பிரதமரை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு எல்லா விதத்திலும் தோல்வியடைந்து விட்டது. ஆகவே, எதிர்க்கட்சிகள் மீது குறை சொல்வதை நிறுத்திக் கொண்டு, தன் தலைமையிலான ஆட்சியின் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும், நாங்கள் சொன்னதை நிறைவேற்ற முடியவில்லை என வெளிப்படையாக சொல்ல வேண்டும். எங்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம் எனவும் சொல்ல வேண்டும். இதை தான் உண்மையான தலைவர் செய்வார்’’ என்று பேசியுள்ளார்.

modi
முன்னதாக மற்றொரு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியபோது, பா.ஜ., தலைமையிலான அரசு அமல்படுத்திய அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்துள்ளது. நாட்டை பாதிக்கும் விஷயங்களை பிரதமர் கையாள முடியாவிட்டால், அவர் பதவி விலகி காங்கிரஸ் கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும். 6 மாதத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்போம் என்பதை உறுதியாக சொல்கிறேன். வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியாதது இந்தியாவில் பெரிய பிரச்னையாக உள்ளது. சீனாவில் தினமும் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

ஆனால், இந்தியாவில் மோடியின் ஆட்சியில் மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்களின் மூலம் தினமும் 450 வேலைவாய்ப்புகள் தான் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response