பறந்தடிக்க தயாராகும் விக்ரம்

 

ஹரி படம் என்றாலே ரசிகர்களுக்கு எப்போதும் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. டாடா சுமோக்களும், வெட்டுக்கத்தி வேல் கம்போடு படம்முழுக்க ஒரே ரணகளமும், அதகளமுமாக இருக்கும்.

இயக்குனர் ஹரி தற்போது சீயான் விக்ரம் ,கீர்த்தி சுரேஷ், த்ரிஷா நடிக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தை இயக்கிவருகிறார். ‘சாமி’ படம் வெளிவந்து பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்கு மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களுக்கிடையே அதிகப்படியான எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

இந்த நிலையில் ஹெலிகாப்டரில் இருந்து முறுக்கு மீசையோடு ஆக்ரோசமாக  விக்ரம் பறந்து அடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. டாடா சுமோக்களையே தெறிக்கவிட்டு ஆக்சன்காட்சிகளை அள்ளிக்கொடுப்பவர் இந்தமுறை ஹெலிகாப்டரில் பறந்தடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளதால் நெட்டிசன்கள் தொடர்ந்து இதை சேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

CHIYAAN VIKRAM

Leave a Response