முதலையுடன் சண்டை போடும் நான்கு கதாநாயகிகள்..!

கிருத்திகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கன்னித்தீவு. த்ரிஷா நடிப்பில் கர்ஜனை திரைப்படத்தை முடிந்த கையோடு இயக்குனர் சுந்தர் பாலு கன்னித்தீவு படத்தை இயக்கி வருகிறார்.
இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் நடைபெற உள்ளது. மிக பிரமாண்டமான லேக்கில் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.
இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் உருவாகும் முதலையுடன் சண்டை காட்சி, படத்தின் பிற்பகுதியில் வரும் என்று இயக்குனர் சுந்தர் பாலு தெரிவித்துள்ளார். இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் சிவா எடுத்து வருகிறார்.
அரோல் குரோலி இசையமைக்கும் இப்படத்திற்கு சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார் லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.

Leave a Response