மீண்டும் இரட்டை இலைக்கு போட்டி போட வருகிறார் தீபா!

aiadmk

எம்.ஜி.ஆர். வெற்றியோடு துவக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாகிய அதிமுக எனும் நமது உயிர் மூச்சான கழகத்தினை ஜெயலலிதா மாபெரும் வெற்றி இயக்கமான இந்திய பூபாளத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கி நம்மிடம் இயக்கத்தினை ஒப்படைத்து மறைந்த நிலையில் துரோகிகளால் இயக்கம் பிளவு பட்டு தேர்தல் ஆணையத்தில் முடிவுகளாகி காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளதை நினைத்து மிகவும் வேதனையுற்றுள்ளேன்.

deepa_16249

இந்நிலையில் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்று உண்மையான தொண்டர்கள் அழைத்ததின் பேரில் நான் அரசியல் காலத்தில் அம்மாவின் உண்மையான விசுவாச தொண்டர்களுக்காக வந்துள்ளேன். புரட்சித் தலைவர் நமக்கு வகுத்து தந்த அஇஅதிமுக சட்ட விதிகளின் படி அடிப்படை அதிமுக தொண்டர்களால் தேர்வு செய்யப்படுகிறவர்கள் தன் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்ய முடியும் என்ற கட்சி அடிப்படை விதிகளின் படி தேர்தல் ஆணையம் நமக்கு உரிய கால அவகாசம் அளித்திட்ட நிலையில் நாடு முழுவதும் உலக தொண்டர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னணி நிர்வாகிகள், திரட்டி அளித்திட்ட 5,52,000 (ஐந்து லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம்) பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளோம்.

அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்கள் கூட நமது எண்ணிக்கைக்கு குறைவான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர், தேர்தல் ஆணையத்தில் நமது அதிமுக(ஜெ.தீபா )அணி சார்பில் நமது கழக வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அவர்களின் பெயரில் 2 வழக்கறிஞர்க்க்ள் தாக்கல் செய்துள்ளோம்.அஇஅதிமுக சட்ட விதி 43 க்கு புறம்பாக இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ததை தேர்தல் ஆணையம் ரத்து செய்திட வேண்டும்.

thiipaa

அதிமுக சட்ட விதிகளின் படி 1 1/2 கோடி தொண்டர்களால் புதிய பொதுச்செயலாளர் தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையமே, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் முன்னின்று அஇஅதிமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்று அணியின் கோரிக்கையாக வழக்கு தாக்கல் செய்துள்ளோம். தொடர்ந்து 5 முறை டெல்லிக்கு நமது அணியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் சிறப்பாக வாதாடியுள்ளோம். தற்போது உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை மட்டும் கணக்கில் வைத்து தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்க கூடாது.

1977 முதல் இன்றுவரை உள்ள ஏராளமான முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், முன்னாள் மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், ஊராட்சி பஞ்சாயத்து தலைவர்கள் வரை ஏராளமானோர் நமது அதிமுக (ஜெ.தீபா) அணியைத்தான் ஆதரிக்கிறார்கள் இது போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியல்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததோடு அதிமுக கட்சியையும் கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும் நமக்கு கிடைப்பதற்கு பலவகையான முக்கியமான சான்று ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளோம்.

elect

இந்திய தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயக முறையில் தன்னிச்சையான சுயமான அமைப்பாகும், ஆகவே 6.10.2017 அன்று இறுதி விசாரணை நடைபெற்ற பிறகு நமது வழக்கின் நல்ல தீர்ப்பை தேர்தல் ஆணையம் நமக்கு ஆதரவாக வெற்றி செய்தியை நாடு போற்றும் வகையில் அஇஅதிமுக கட்சியையும் கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும் நமது அதிமுக(ஜெ தீபா) அணிக்கு வெற்றி வாகை சூடிடும் வகையில் அளித்திடும் நல்ல தீர்ப்பை நாடும் ஏடும் போற்றும் வகையில் நமக்கு வெற்றி செய்தியினை வரவிருக்கிறது என்பதை புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Response