ஜூலை 13ஆம் தேதி வெளியாகும் கார்த்தியின்”கடைக்குட்டி சிங்கம்”..!

பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் “கடைக்குட்டி சிங்கம் ” இதில் கார்த்தியும் அவரது ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா, பிரியா பவானிசங்கர், அர்த்தனா நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம்,`முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வரும் 13ஆம் தேதி ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response