தீவிரமடையும் கனமழை; விவசாயிகள் குஷி!

தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், தீவிரம் அடைந்துள்ளது.

அரபிக்கடலை ஒட்டியுள்ள, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள்; வங்க கடலை ஒட்டியுள்ள, தெலுங்கானா, அசாம், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களிலும், கன மழை பெய்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்த வரையில்,தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.தொடர்ந்து நகர்ந்து வரும் மேக கூட்டங்களால், தமிழகத்தில் ஆங்காங்கே திடீர் மழை பெய்கிறது. அதே நேரம் தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களின் பல இடங்களில், இன்று, கன மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை இரவு நேரத்தில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாம் . நேற்று கிண்டி,போரூர்,அசோக் பில்லர் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது
அதிகரித்து வரும் மழையால், நொய்யல் ஆறு, ஒகேனக்கல் உள்ளிட்டவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பொதுவாகவே அதிக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்

Leave a Response