மீண்டும் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

summer_rain
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று (10ம் தேதி) முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பெரிதாக எங்கும் மழை பெய்யவில்லை. நேற்றும் தமிழகத்தின் பல இடங்களில் வெயில் அடித்தது.

இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

“அரபிக்கடலில் கேரளா பகுதியில் உருவாகியுள்ள மேல் அடுக்கு சுழற்சியால், கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு. தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை இருக்கும். ஆனால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘ தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 13ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது” என தெரிவித்துள்ளது.

Leave a Response