உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘இப்படை வெல்லும்’. கவுரவ் நாராயணன் இயக்க இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
திருவண்ணாமலையில் பிறந்து சென்னைக்கு சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்பவர்தான் இந்த படத்தின் கதாநாயகன் உதயநிதி. நன்றாக லைஃப் போய்க்கொண்டிருக்கும் இவருக்கு திடீரென வேலையை இழக்கும் சூழ்நிலை உண்டாகிவிட்டது. ஆனால் அவர் வேலை இழந்ததை வீட்டிற்கு சொல்லாமல் மறைத்து விடுவார். அவர் அம்மா ஒரு அரசு பேருந்து ஓட்டுனர் அந்த பெண் யாருன்னு பாத்தா நம்ப ராதிகா சரத்குமார் தான். அவருக்கு உதயநிதி இல்லாம இரண்டு மகள் இருகிறார்கள் .
உதயநிதிக்கு ஜோடியா மஞ்சிமாமோகன், இந்த படத்துல அவங்க பங்கிற்கு சிறப்பாக நடித்துள்ளார். உதயநிதியும் மஞ்சிமாவும் காதலிக்குறது போலிஸ் அதிகாரியாக இருக்கும் மஞ்சிமாவின் அண்ணன் ஆர்.கே.சுரேஷ்க்கு தெரியவர கதை சூடுபிடிக்கிறது.
வில்லனான டேனியல் பாலாஜி, அவருடைய வேலை பாம் வைக்குறது தாங்க. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் பார்த்த அதே வெறியோடு தோன்றுகிறார் டேனியல் பாலாஜி. அந்தக் கண்கள் மட்டும் போதும் அவருடைய வெறித்தனத்தை வெளிப்படுத்துகிறது. இரண்டு இடங்களில் பாம் வைச்சுட்டு சென்னைக்கு வருவாரு, அப்போதாங்க தெரியாமல் உதவி செயப்போய் நம்ப காமெடியன் சூரி பெரிய வில்லங்கத்துல சிக்கிறார். அவரு மட்டும் இல்லாம நம்ப கதாநாயகனும் ரொம்ப பெருசா சிக்கொல்கிறார்.
உதயநிதியும் சூரியையும் படம் முழுக்க ட்ராவல் ஆகிறார்கள். காவல்துறை இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறார்கள். இருவரும் சேர்ந்து வேறு எதையோ மனதில் வைத்து பேச காவல் துறை அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு செய்யும் விதம் காமெடி காட்சிகள் ஒர்க்கவுட் ஆனது. அதன் பிறகு யாரும் எதிர்ப்பாராத அளவிற்கு விபத்து ஏற்படுகிறது.
இருவரும் மருத்துவனையில் இருக்கும் போது சூரி செய்யும் அலம்பல் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் அனைவரையும் சிரிக்க வைத்ததுவிடும்.
அதன் பிறகு தான் படம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். உதயநிதியும் சூரியையும் என்ன செய்கிறார்கள், டேனியல் பாலாஜி சென்னை பயணம் என்னவாகிறது என்பது தான் மீதம் உள்ள கதை.
இப் படத்தில் உதயநிதியின் நடிப்பு திறன் அதிகரிதுள்ளது,அது மட்டுமின்றி நடனம், சண்டை கட்சிகளில் அவருடைய முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் இப் படம் அவருக்கு மிகவும் வெற்றி படமாக இருக்கும்.
இப் படத்தில் சூரிக்கு மனைவியாக Rj தற்போது பாத்திரிக்கையாளர் பணியாற்றிவரும் ரோகினி நடித்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட கதாபத்திரத்தில் அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கவுரவ் நாராயணன் வெற்றி படமாக இது அமையும். இப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று திரையரங்கில் பார்த்து ரசிக்கவும்.