தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ’க்கள்; வழக்கில் ஆஜராக டெல்லியிலிருந்து வழக்கறிஞர்கள் வருகை!

salmaan kurshith

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கில் தினகரன் தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆகியோர் தில்லியில் இருந்து வருகிறார்கள்.

dave

இருவரில் சல்மான் குர்ஷித் காங்கிரஸை சேர்ந்தவர். மூத்த வழக்கறிஞர். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தினகரன் தங்கள் தரப்பில் நியமித்துள்ள வழக்கறிஞர் காங்கிரஸை சேர்ந்தவர்.

இன்னொரு வழக்கறிஞர் தவே. ஜெயலலிதாவின் வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துக் குவிப்பு குறித்த கர்நாடக அரசின் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் கர்நடக அரசு வழக்கறிஞராகவும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராகவும் ஆஜரானவர் இவர்.

இந்த இருவரும் 18 பேரின் தகுதி நீக்க விவகாரத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது, நாளை உயர் நீதிமன்றத்தில் வரும் வழக்கின் விசாரணையில் தெரியவரும்!

Leave a Response