கோரக்பூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி!

UP_04106_08060
கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி அரசு மருத்துவமனையில், 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், மூளை வீக்கம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததே குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் என்று புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவரது மனைவியும், மருத்துவருமான பூர்ணிமா சுக்லா ஆகியோரை சிறப்புப் படை போலீஸார் கான்பூரில் இன்று கைது செய்தனர்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 6 ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் மீது ஹஸ்ரத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேலும் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. அதில் 7 குழந்தைகள் மூளை வீக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்றும் மற்ற குழந்தைகள் வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என்றும் மருத்துவமனை முதல்வர் பி.கே. சிங் கூறியுள்ளார்.

Leave a Response