‘விவேகம்’ கதை திருட்டு விவகாரம்! வீதிக்கு வரப்போகிறது பஞ்சாயத்து! படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி!!

vivegham-e1490684024159
அஜித் நடித்த படங்களிலேயே அதிக செலவில் தயாரான படம் விவேகம். அதிகம் பேரால் விமர்சனம் எழுதப்பட்ட, பேசப்பட்ட படமும் இதுவாகத்தான் இருக்கும் போலிருக்கிறது!

விமர்சனங்களையெல்லாம் தாண்டி படம் சூப்பர் டூப்பர் ஹிட். இதுவரை 100 கோடிவரை வசூல் என்று படம் ரிலீஸான நான்காவது நாளில் புள்ளி விவரங்கள் வந்தன!

டிக்கெட் விலை ரூ. 1000, 1500 என விற்பனை செய்யப்பட்டது குறித்து புகார்கள் எழுந்தும் அஜித் தரப்பிலிருந்து எந்த பேச்சையும் காணோம்!

இதெல்லாம் ஒருபுறமிருக்க, விவேகம் கதை தன்னுடையது என படத் தயாரிப்பாளர் ரவீந்தர் பகீர் தகவலைச் சொல்லி வருகிறார். இது பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் ஆதங்கத்தைக் கொட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்!

அதன் விவரம்:-

‘‘நான்கு வருடங்கள் முன்பே இந்தக் கதையை எழுதி நடிகர் அஜீத்குமாருக்கு மிக நெருக்கமான உதவியாளரிடம் கொடுத்து அஜித்திடம் சொல்லும்படி சொல்லியிருந்தேன். மூன்று வாரங்கள் நேரம் கேட்ட அந்த உதவியாளர் பின்பு வந்து புதிய இயக்குநரின் படத்தில் அஜித்குமார் நடிக்க மறுப்பதாகச் சொன்னார்.

இதனால் இதே கதையை வைத்து தான் அடுத்து ‘ஐ.நா.’ என்கிற தலைப்பில் படமாக தயாரிக்க உத்தேசித்திருந்தேன்.

ஆனால் இப்போது ‘விவேகம்’ படத்தை பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ‘விவேகம்’ படத்தின் திரைக்கதையில் இருப்பது அறுபது சதவிகிதம் நான் எழுதிய திரைக்கதை!

இதற்காக அஜித்தையோ, படத்தின் இயக்குநர் சிவாவையோ குற்றம் சாட்டவில்லை. அவர்களுக்கு இந்த கதை திருட்டு வேலையில் சம்பந்தம் இருக்காது. ஆனால் நான் அஜித்தை நெருங்க முயற்சித்தபோது உதவி செய்ய வந்த அஜித்தின் மிக நெருங்கிய உதவியாளர் மூலமாகத்தான் இந்தக் கதை திருடப்பட்டிருக்கும்!

என்னுடைய ‘ஐ.நா.’ திரைப்படம் இந்த வருடம் துவங்கப்படுவதாக இருந்த நிலையில் கதை திருடப்பட்டதால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்!’’ என பதிவிட்டுள்ளார்

மேற்கண்ட விவகாரம் சம்பந்தமாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரிடம் ‘ஒற்றன் செய்தி’ நிருபர் என அறிமுகப்படுத்திக் கொண்டு போனில் பேசினோம்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை தன் குமுறலை நம்மிடம் பகிர்ந்தார்.
Ravindar-Chandrasekar
‘‘என் கதையின் மையப்புள்ளியை பயன்படுத்தி எடுத்துள்ள படம் இது.
விவேகத்தில் நடாஷானு ஒரு கேரக்டர் வருதுல்ல. என் கதையில அந்த கேரக்டர்ல ஒரு பையன் வருவான். இதே மாதிரி பல விஷயங்களை மாத்திருக்காங்க. மாத்தினவங்க நல்லபடியா எடுத்திருந்தாலாவது பரவாயில்லை. இப்படி ஏகத்துக்கும் சொதப்பிருக்குறதால என் கதைன்னு சொல்லிக்கவே ஒரு மாதிரி இருக்கு.

விஷயம் என்னன்னா நான் சொன்ன ஐ.நா. கதையை நான் சொன்ன விரிவான விவரங்களோட யாராலயும் சொல்ல முடியாது. காரணம், ’செக்யூரிடி ஸ்குவாட்’ பத்தின அந்த கதையை நான் ஏதோ சும்மா விளையாட்டுக் கற்பனையா யோசிக்கலை. சம்பந்தப்பட்ட இடங்கள்ல நான் இருந்திருக்கேன். ஐ.நா.வுல நான் வேலை பார்த்திருக்கேன். நான் பார்த்த, கேட்ட விஷயங்கள்லேருந்து நான் உருவாக்கின கதை அது. கதையை ஐ.நா. வை மையப்படுத்தி உருவாக்குனதாலதான் ஐ.நா.வோட தலைமையகம் இருக்குற பகுதிகள்ல குறிப்பா பல்கேரியாவுல படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தேன்.

இது முழுக்க முழுக்க அஜித்துக்காக உருவாக்கின கதை. கதையை என்கிட்டே கேட்டுக்கிட்டு போய் சொன்ன அந்த உதவியாளர் கதை பிடிச்சுருக்குன்னு சொன்ன தகவலும் வந்துச்சு. அஜித்தோட சம்பளத்தை உங்களால கொடுக்க முடியுமானும் கேட்கப்பட்டது. நானேதான் தயாரிப்பு இயக்கம்கிறதால அஜித் நடிக்க சம்மதிக்கிற பட்சத்துல கொடுக்கத் தயாராவும் இருந்தேன்” என்று சொன்னவர் தன்னுடைய ஐ.நா படத்துக்காக உருவாக்கிய போஸ்டர்களில் கையாண்டிருந்த நுணுக்கங்களை விரிவாக விவரித்தார்!

‘‘ஒரு படம் பரபரப்பா பேசப்பட்டா உடனே எங்கிருந்தாவது சிலர் கிளம்பி வந்து இது என்னோட கதைன்னு ஆரம்பிப்பாங்க. ஆனா, நான் அப்படியான பப்ளிசிடி எதுக்கும் ஆசைப்படலை.

விவேகத்துல இருக்குற மூலக்கதை என்னோடதுங்கிறதுக்கு உரிய ஆதாரம் இருக்கு. என்கிட்டே கதையைத் திருடின அஜித்தோட அந்த உதவியாளர் என்கிட்டே தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டாகணும். இல்லேன்னா இதை பப்ளிக் இஷ்யூவாக்குவேன்!” என்றவர் தன்னுடைய ஐ.நா. படத்தின் கதையின் பல அம்சங்களை விரிவாக விவரித்தார்.
ina

ina 2
அவர் சொன்ன விவரங்களை வைத்துப் பார்க்கும்போது வெறுமனே பப்ளிசிடி ஸ்டண்ட்காக சொன்னதுபோல் தெரியவில்லை. உண்மையை சொல்வதாகவே உணர முடிந்தது! கடைசி வரை கேட்டும் அவர் குறிப்பிடும் நபரின் பெயரை மட்டும் குறிப்பிட மறுத்து விட்டார்!

Leave a Response