விஸ்வாசம் அப்டேட் : இன்று 7 மணிக்கு தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இன்று இரவு 7 மணிக்கு ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தல அஜித் தற்போது வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி செம வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து “கண்ணான கண்ணே” என்ற லிரிக்ஸ் வீடியோ இன்று மாலை 7 மணிக்கு லஹரி மியூசிக் யு ட்யூப் சேனலில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Response