முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்..!

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சற்றுமுன் சந்தித்தார்.

கஜா புயல் நிவாரணம், மத்திய அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் பிரதமர் தமிழக வருகை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

நேற்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Response