சென்னை வந்தார் ஆளுநர்! சந்திக்க கியூவில் நிற்கின்றன அரசியல் கட்சிகள்!!

vidyasagar-rao34-600-07-1481124986
தமிழகத்தில் தற்போது உள்ள பரபரப்பு அரசியல் சூழ்நிலையில் மும்பையில் இருந்து இன்று ஆளுநர் சென்னை வந்துள்ளார்.

டிடிவி.தினகரன் ஆதாரவு எம்.எல்.ஏ க்கள் 19 பேர் கடந்த 22-ஆம் தேதி கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அந்த பதவியில் இருந்து நீக்கக் கோரி தனித்தனியாக மனு ஒன்றை அளித்தனர். ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்காமல் ஆளுநர் மும்பை சென்றார்.

மனு கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது டிடிவி.தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அரசு பெரும்பான்மையை இழந்துவிடும் என்றும், அதனால் அரசு தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்றும் அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், சட்டசபையை உடனே கூட்டவேண்டும் என்றும், அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மும்பையில் இருந்து இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார்.

அண்ணாபல்கலை கழகத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்ள உள்ளார்.

அதன்காரணமாகவே ஆளுநர் சென்னை வந்துள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைதொடர்ந்து அரசியல் கட்சிகள் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தி.மு.க.வும் நேரம் கேட்டுள்ளது. “ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளோம். அவரது அழைப்புக்காக காத்திருக்கிறோம். அழைத்ததும் சென்று சந்திப்போம்” என தி.மு.க.வின் துரைமுருகன் இன்று மாலை பேட்டியளித்தார்.

Leave a Response