பீகாரில் வெள்ளம்…பார்வையிட்ட பிரதமர் மோடி; நிவாரணம் 500 கோடி!

pmo 5
பீகாரில் வெள்ளதில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை விமானத்தில் சென்று பார்வையிட்டார். இதற்காக பீகாரில் உள்ள புர்னிய என்ற இடத்திற்கு சென்ற பிரதமர் அங்கு மூத்த அதிகாரிகள், முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில் மோடி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
pmo
ஐக்கிய ஜனதா தளகட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இனைந்த பிறகு பீகாருக்கு பிரதமர் மேற்கொண்ட முதல் சுற்றுப்பயணம் இது. விமானத்தில் இருந்து வெள்ள சேதத்தை பார்வையிட்ட பிரதமருடன் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில் மோடி உள்ளிட்டோரும் இருந்தானர்.

பீஹார் மாநிலத்தின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1 கோடியே 67 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். முசாஃபர்பூர், தர்பங்கா, சமஷ்திபுர் மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி பீஹார் மாநிலத்திற்கு உடனடி நிவாரணமாக ரூ. 500 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் நிவாரணப் பணியில் மாநில அரசுடன் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்த பிரதமர், வெள்ளச் சேதங்களை மதிப்பிட மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Leave a Response