நயினாரை வளைத்த பொன்னார்! அதிமுகவில் இன்னும் எத்தனை விக்கெட் விழுமோ?

pon
அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன், அ.தி.மு.க.வில் இருந்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன் ஆகியோரும் பா.ஜ.க.வில் இணைந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த நயினார் நாகேந்திரன், அணிகள் பிரிவுக்குப் பின்னர் எந்தவொரு அணிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பாஜகவில் இருந்து அழைப்பு வந்தது. மேலும் மாநில அளவில் முக்கிய பொறுப்புகளை வழங்குவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 22-ல் அமித் ஷா தமிழகம் வர இருந்தார். அவரது முன்னிலையில் பா.ஜ.கவில் நயினார் நாகேந்திரன் இணைவார் என்றும் கூறப்பட்டது. கடைசி நேரத்தில் அமித் ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.

அவருக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயினார் நாகேந்திரன் போலவே அதிமுக.வைச் சேர்ந்த இன்னும் சிலரும் அதிருப்தியில் இருப்பதால் விரைவில் அவர்களும் பாஜக.வில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது!

Leave a Response