கொறடா கோரிக்கை மனுவிற்கு விளக்கம் கேட்டு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் !

saba
கட்சிக்கு எதிராக செயல்படுவதாக தலைமைக் கொறடா ராஜேந்திரன் மனுவிற்கு விளக்கம் கேட்டு தினகரன் ஆதரவு 19 அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதிமுக இணைப்புக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி 19 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதையடுத்து தமிழக அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தலைமை கொறடா என்ற முறையில் தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் 19 எம்.எல்.ஏ-க்களும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது. எனவே கட்சிக்கு எதிராக செயல்பட்ட 19 எம்.எல்.ஏ-க்களின் பதவிகளையும் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் தலைைம கொறடாவின் புகாருக்கு பதில் அளிக்க கோரி அந்த 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 19 எம்.எல்.ஏ-க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்டுள்ள சபாநாயகர், ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response