ஓபிஎஸ் கிணற்றை தானமாக வழங்கினார்! லட்சுமிபுரம் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்

ops

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விவசாயத்துக்காக அவரின் நிலத்தில் ராட்சத கிணறு ஒன்றை அமைத்தார். ஏற்கெனவே குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த கிராம மக்களுக்கும் இந்தக் கிணற்றால் மேலும் சிரமம் ஏற்பட்டது.

கிராம மக்கள் கிணற்றை பொதுமக்களுக்கே ஒப்படைக்கும்படி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.

paththiram

இதனையடுத்து நேற்று ஒருவழியாக பத்திரப்பதிவு நிறைவடைந்தது.

lakshmipuram

நன்றி தெரிவிக்கும் கூட்டம்:-

பொது பயன்பாட்டுக்கு கிணறு மற்றும் நிலத்தை தானமாக கொடுப்பதாக பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் லட்சுமிபுர கிராம மக்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

Leave a Response