தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ஒன்றிணைந்த எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் யாருக்கு சின்னத்தை வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணையம் நாளை இறுதிக்கட்ட விசாரணையைத் தொடங்க உள்ளது. இதற்காக இரு தரப்பினரும் டெல்லி செல்கின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி-ஓபன்னீர்செல்வம் தரப்பில் அந்த அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டனர். முன்னதாக கே.பி.முனுசாமி கூறுகையில் ‘நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்’ என்றார்.