ஜெ. வேதா இல்லம் விவகாரத்தில்… ஓபிஎஸ்-க்கு டிகேஎஸ் கொடுத்த பதிலடி !

tks 2
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் விவகாரத்தில் தலையிட சட்டம்படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. பொது அறிவு இருந்தால் மட்டும் போதும் என்று திமுக எம்.பி. டிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தனியார் சொத்தை அரசு பறிமுதல் செய்ய முடியாது. ஜெயலலிதாவின் வேதா இல்லம் சட்டப்படி நினைவில்லமாக்க முடியாது. அது பற்றி கூற சட்டம் படித்த வக்கீல் தேவையில்லை. பொது அறிவு இருந்தால் போதும். எடப்பாடி பழனிச்சாமி அரசு தேவையெனில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும். அதிமுக அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். என இளங்கோவன் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில், ‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக்குவது சட்டப்படி தவறு’ என கூறியிருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, மு.க. ஸ்டாலின் கருத்துக்கு பதில்கூறிய, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ” ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக்குவது குறித்து கருத்து சொல்ல, ஸ்டாலின் ஒன்றும் சட்டம் படித்த வக்கீல் அல்ல.

அதிமுக அணிகள் இணைவது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும்” என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் டிகேஎஸ் இளங்கோவன் மேற்கண்டவாறு கூறியுள்ளது அதிமுக, திமுக கட்சியினர் மத்தியில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

Leave a Response