ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக்கும் பணி இன்று துவக்கம் !

vedhaa
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இல்லமான ‘வேதா இல்லம்’ நினைவிடமாக்கும்பணி இன்று துவங்கியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மதாம் உடல் நலக்குறைவால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா காலமானார். அதன் பின்னர் ஆளும் கட்சியான அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படத் தொடங்கின.

இதில் ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் தலைமையில் மூன்று அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

அதில் ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை, ஜெயலலிதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படுவது ஆகியவை அடங்கும். இதனைத் தொடர்ந்து அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை பரபரப்பானது.

நேற்று இரவு வரை இந்த பேச்சு வார்த்தை நீடித்த நிலையில், முடிவுகள் எட்டப்படாமல் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கிளம்பிச் சென்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. அதற்காக அதிகாரிகள் வேதா இல்லத்தை அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதா இல்லத்தில் அவரது மறைவிற்கு பின், சசிகலா வசித்து வந்தார். பின்னர் அவர் சிறைக்கு சென்ற பின், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பராமரித்து வந்துள்ளார்.

Leave a Response