அ.தி.மு.க. அணிகள் இணைகின்றன?! ஜெ., நினைவிடத்தில் பரபரப்புக் காட்சிகள் அரங்கேற்றம்

edapadi-palanasami

தமிழக அரசியலில் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லை. இதோ இப்போதும் அப்படியொரு பிரேக்கிங் நியூஸுக்காக தமிழகம் காத்துக் கொண்டிருக்கிறது!

பிரிந்து கிடந்த அதிமுகவின் இரு அணிகளும் இன்னும் சற்று நேரத்தில் இணைவதாக வந்துள்ள தகவல்தான் பெரியதொரு பிரேக்கிங் நியூஸுக்கு தமிழகத்தை தயார்படுத்தியிருக்கிறது!

ops
அணிகள் இணைப்பு விஷயத்தில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அது குறித்த முக்கிய இரண்டு அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.

ஒன்று: ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்படும்

இரண்டு: ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவில்லம் ஆக்கப்படும்!

மேற்கண்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தனது நிர்வாகிகளுடன் இன்று கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது அமைச்சரவை பிரமுகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று மாலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸும் நினைவிடத்துக்கு வருவதாகவும் அணிகள் இணைப்பு நடைபெறும் என்றும் தகவல் கசிந்துள்ளது!

இரு அணிகள் இணைந்தால் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொதுச்செயலாளர் பதவியும் மாஃபா. பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது!

Leave a Response