திருவண்ணாமலையில் வெள்ள பெருக்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி

arani 2
திருவண்ணாமலையை அடுத்து ஆரணியில் உள்ள கமண்டல நாக நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜவ்வாதுமலையில் இருந்து உருவாகும் கமண்டல நாக நதி, ஆரணி, கண்ணமங்கலம் பகுதி வழியாக செல்வதால், அப்பகுதியை சுற்றியுள்ள, 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர்.

இந்த நதியின் மூலம் வரும் நீர், அப்பகுதியில் உள்ள ஏரி, குளம், ஆகியவற்றிற்கு சென்று, அப்பகுதியில் விவசாய கிணறுகளில் நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதியில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், கமண்டல நாகநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது, விவசாயிகள் மற்றும் பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Response