பா.ஜ. க. வில் சேரும் அ.தி.மு.க அமைச்சர்கள்

bjp_CI
பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வரும்போது அவரது முன்னிலையில் அ.தி.மு.க., ‘மாஜி’ அமைச்சர்கள் அக்கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பா.ஜ.,வினர் கூறியதாவது:-

அ.தி.மு.க., போன்ற அனுபவம் வாய்ந்த தொண்டர்கள் பலம் மிக்க கட்சியில் இருந்து மூத்த தலைவர்களை கட்சியில் சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ.க, ஆழமாக வேரூன்றும் என டில்லி மேலிடம் கருதுகிறது. அந்த கருத்துகளின் அடிப்படையின் கீழ் அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் இருக்கும் சில மூத்த தலைவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் விரைவில் பா.ஜ.,வில் சேர்க்க படுவார்கள். அமித்ஷா வருகையின்போது அதை சாத்தியமாக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

Leave a Response