ஷீரடியில் சாய்பாபாவை தரிசனம் செய்த ஓ.பி.எஸ்

ops 3
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஷீரடி சாய்பாபா மற்றும் சிக்னாபூர் சனீஸ்வரன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

அதிமுக இரு அணிகளும் இணைப்பு உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தமிழ்நாட்டில் பரபரப்பை கிளம்பியுள்ளது. டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் என்று மூன்று அணிகள் அதிமுகவில் இயங்கிவருவதால் அக்கட்சி தொண்டர்கள் தினமும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

யார்தான் உண்மையான தலைமை என்பதில் நீடிக்கும் குழப்பத்தால், அரசு மற்றும் அதிமுக கட்சிக்குள் மந்த நிலை நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை ஜனாதிபதி பதவியேற்ப்பு விழாவிழ் கலந்துகொள்ள டெல்லி சென்றிருந்தனர். அங்கு விழ முடிந்தவுடன் எடப்படியை பிரதமர் சந்தித்து பேசினார். ஆனால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார்.

இதனிடையே, டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அவருடன் மைத்ரேயன் உள்ளிட்டோரும் சென்று சாய்பாபாவை தரிசனம் செய்தனர். பின்னர் அங்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், அதிமுக அணிகள் இணைப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் அவர், ‘தமிழக மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்தேன்’ என்று தெரிவித்தார். முன்னதாக அவர் சிக்னாபூர் சனீஸ்வரன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

Leave a Response