எம்.எல்.ஏ., போலீஸ், ராணுவவீரர்கள்… யாரையும் விடவில்லை டெங்கு!

dengu_1
தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது டெங்கு காய்ச்சல். இந்த டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் மட்டுமின்றி சிறார்களும், எம்.எல்.ஏ.க்களும் போலீசாரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதுவை முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சிபு, ஆயுதப்படை போலீஸ் பார்த்திபன், தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த சக்திவேல் உள்ளிட்ட போலீசார் 4 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்தவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டனர்.

போலீசாரை தொடர்ந்து இப்போது பூவிருந்தவல்லி 77வது படாலியின் சிஆர்பிஎஃப் வீரர்கள் பிரவீன், பிரஜேஸ் இருவரும் டெங்கு அறிகுறியுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிஆர்பிஎஃப் இன்ஸ்பெக்டர் லோகேஷ்வரராவ், காவலர் பிரதம் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெங்கு பீதியால் பூவிருந்தவல்லி முகாமில் உள்ள சிஆர்பிஎஃப் வீரர்களிடையே அச்சம் நிலவுகிறது. அதைப்போல ஈரோடு திருநகரை சேர்ந்த எலக்டிரிசியன் ஜாகிர்உசேன் மர்மகாய்ச்சலால் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்மகாய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Response