குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் குஷி!

kurralam

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து குற்றாலத்தில் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இருப்பினும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குற்றாலம் என்றாலே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் சீசன் களைகட்டத் தொடங்கும்.

கடந்த 30ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது.

kurrala aruvi

இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சீசன் வருவதற்கான தென்றல் காற்றும், வெயிலுடன் கூடிய சாரல் மழையும் அப்போதைக்கு அப்போது தலை காட்டிக் கொண்டே இருந்தது. நேற்று இரவு முதலே குற்றாலத்தில் உள்ள 5 அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குற்றாலத்தை பொருத்தவரை பாதுகாப்பு அம்சங்களுக்காக தனி ஆணையம் ஒன்றை உயர்நீதிமன்றம் அமைத்திருந்தது. ஆனால் அந்த ஆணையத்துடைய பரிந்துரைகள் முழுமையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இவ்விடத்தில் மருத்துவ வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது.

Leave a Response