நீலகிரி மாவட்டத்தில் பூத்துக்குலுங்கும் லெட்லீஃப் மலர்கள் சுற்றலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொள்வதாய் உள்ளது. ஆரம்பத்தில் பச்சை இலைகளாக வளர்ச்சியடையும் அவை சில நாட்களில் சிகப்பு, இளஞ்சிவபபு, மஞ்சள், வெள்ளை நிரமாக பல்வேறு வண்ணங்களாக மாறி வருவதால் இதனை ரெட்லீஃப் மலர்கள் என்று பெயர்சூட்டியுள்ளனர்.
தூரத்தில் இருந்து பார்ககும்போது பச்சைபசேல் என்று காட்சி தரும் இந்த மலர்கள் தேயிலை தோட்டங்களின் இடையே சிகப்பு கம்பலம் விரித்தது போல் காட்சியளிக்கிறது. இன்னும் சில தினங்களில் இரண்டாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் இந்த மலர்கள் சாலையின் ஊரங்களில் பூத்துக் குலுங்குவதால் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.