தமிழுக்கு மரியாதை செய்யும் மெட்ரோ ரெயில் !

metstaa1_2455790g
சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலில் எங்கும் இந்தி காணமுடியவில்லை குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரெயில் நிலைய பெயர் பலகைகள் மற்றும் தகவல்கள், ஒலி பெருக்கிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பயன் பாட்டில் உள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளுக்கு வழங்கும் ‘டிராவல் கார்டு’ எனும் பயண அட்டைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால் உடனுக்குடன் வாங்கும் டிக்கெட்டுகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த டிக்கட்டுகளை தமிழில் வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது” இந்தி பேசும் மண்டலங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டும் தான் இந்தி பயன்பாட்டில் உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தை பொறுத்த வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே முழுமையாக பயன்படுத்தபடுகிறது. பயண அட்டையிலும் இந்த 2 இரண்டு மொழிகள் பயன்படுத்தப்படுகிறது.

விமான நிலையங்களில் பிற மாநிலத்தவரும் இந்த மெட்ரோ ரெயில் பயணம் மேற்கொள்வதால் டிக்கட்டுகளில் ஆங்கிலம் பயன்படுத்தபடுகிறது. மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் அதிகமாக வட்டார மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தருவதாக கூறியுள்ளார்.

Leave a Response