உலக தடகளப் போட்டி, 3வது இடத்தில் உசைன் போல்ட்… ரசிகர்கள் அதிர்ச்சி!

polt

இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16-வது உலக தடகள போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்றுவருகின்றன. இதில் மொத்தம் 24 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. உலகின் பிரபல ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் இந்தத் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ஏற்க்கெனவே அறிவித்திருந்தார். அதனால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட், ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். “உலக தடகளத்தில் 11 தங்கப் பதக்கங்களை அள்ளியிருக்கும் இவர், தோற்கடிக்கப்படாமல் விடைபெறுவேன்” எனவும் உசைன் போல்ட் போட்டிக்கு முன்னதாக கூறியிருந்தார்.

Usain Bolt beaten by Justin Gatlin in 100m finals 2017 World Championship
இந்நிலையில், மிக முக்கிய போட்டியான 100மீ ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், அமெரிக்க வீரர் கட்லின் 100 மீட்டர் தூரத்தை 9.92 விநாடிகளிலும், அவரது சக வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற போல்ட் 9.95 விநாடிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இறுதிப்போட்டியில் வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றிருந்தாலும், ரசிகர்கள் போல்ட்டுக்கு சிறப்பான மரியாதையுடன் பிரியாவிடை அளித்தனர்.

Leave a Response