ஜீவசமாதி முடிவு வேண்டாம். நளினி உருக்கம்!

nalini

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி, பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கோர்ட் உத்தரவுப்படி இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகனை ராணிப்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறையில் உள்ள நளினியை சந்திக்க அழைத்துச்சென்றனர். அங்கு காலை 7.45 மணி முதல் 8.15 வரை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் முருகனை மீண்டும் ஆண்கள் சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர். நேற்று நடந்த சந்திப்பின்போது முருகன், நளினியிடம் 18ம் தேதி ஜீவசமாதி அடையபோவது குறித்து தெரிவித்தாராம். இதற்கு நளினி எதிர்ப்பு தெரிவித்தும், மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்தும் உருக்கமாக பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Response