பிரியாமணிக்கு எளியமுறையில் திருமணம்!

piriyamani

தமிழில் பாரதிராஜா இயக்கிய ‘கண்களால் கைது செய்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், பெங்களூருவைச் சேர்ந்த பிரியாமணி. ‘பருத்திவீரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பல்வேறு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், டி.வி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.பிரியாமணிக்கும், மும்பை தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் கிரிக்கெட் நிகழ்ச்சியில் அறிமுகம் ஏற்பட்டு நெருங்கிப் பழகினர். பிறகு இருவரும் காதலித்தனர்.

கடந்த வருடம் மே 27ம் தேதி பிரியாமணி, முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்படி வரும் 23ம் தேதி பெங்களூரு ரிஜிஸ்டர் ஆபீசில் பிரியாமணி, முஸ்தபா ராஜ் திருமணம் எளியமுறையில் நடைபெறுகிறது. 24ம் தேதி மாலை பெங்களூருவில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாராம் பிரியாமணி.

Leave a Response