அது பேய்ப்படம், இது சாமிப் படம்! _உதயநிதி உற்சாகம்

pothuvaga-en-manasu-thangam

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் முதன்முறையாகக் கிராமத்து இளைஞனாக நடித்துள்ளேன். பொன்.ராம் சாரோடு பணியாற்றியவர் தளபதி என்பதால் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ பாணியில் இருக்கும். டைகர் பாண்டியாக சூரி படத்தில் அனைவரையும் பயங்கரமாகக் கலாய்த்திருக்கிறார்” என்று தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

‘சரவணன் இருக்கப் பயமேன்’ ஒரு காமெடி படம். ஆனால் ‘பொதுவாக எம்மனசு’ படத்தில் அழுத்தமான கதையோடு கூட ஒரு சமூகக் கருத்தும் இருக்ககிறது. ‘சரவணன் இருக்க பயமேன்’ சரியில்லை என்று பல விமர்சனங்கள் வந்தன. ஆனால், வசூலில் எந்தவொரு குறையுமே இல்லை. ‘சரவணன் இருக்கப் பயமேன்’ படத்தோடு இப்படத்தை ஓப்பிட வேண்டாம். அதில் பேய் இருந்தது, இதில் சாமி இருக்கிறது. அவ்வளவு தான்.

Leave a Response