ஜி.எஸ்.டி. வரியின்கீழ் 71 லட்சம் நிறுவனங்கள்! _மத்திய நிதியமைச்சர் தகவல்

jetlee

ஜி.எஸ்.டி கவுன்சிலின் 20வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அதில், பல்வேறு துறைகளின் வரிகுறைப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி,

* ஜவுளி சார்ந்த எம்பிராய்டரி, தரைவிரிப்பு, நெசவு, குளிருக்குப் பயன்படும் ஷால்களை பின்னுதல், போன்ற தொழில்கள் மீதான வரிவிதிப்பு 18% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* இதேபோல் டிராக்டர் உதிரி பாகங்கள் மீதான வரி 28% இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* ரூ.50,000க்கு அதிகமான மதிப்புள்ள பொருட்கள் 10கி.மீ தூரத்திற்கு விற்பனைக்கு சென்றால், அதை இணைய வழி பில் மூலம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.

ஒட்டுமொத்தமாக 19 சேவைகளின் வரி விகிதம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 71 லட்சம் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி மாறியுள்ளதாகவும், 15.67 லட்சம் நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்திருப்பதாகவும் அருண் ஜெட்லி கூறினார்.

ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
என்று அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Response