துணைக் குடியரசுத் தலைவராகிறார் வெங்கையா நாயுடு!

venkaiah-naidu

குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது.

இதையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த எம்எல்ஏக் களும் வாக்களித்தனர். ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் வாக்களிக்க உள்ளனர்.

ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும் (68), எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் (72) தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்க ளவையை சேர்த்து மொத்தம் 787 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மக்களவையில் 543 எம்.பி.க்கள் உள்ளனர். 2 இடங்கள் காலியாக உள்ளன. மாநிலங்களவையில் 244 எம்.பி.க்கள் உள்ளனர். இங்கு ஒரு இடம் காலியாக உள்ளது.

மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு முடிந்த பிறகு உடனடியாக எண்ணிக்கை தொடங்கி விடும். எனவே, இன்று மாலையே முடிவுகள் வெளியிடப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதரவு அதிகமிருப்பதால் வெங்கையா நாயுடு வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது!

Leave a Response