வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா! சிறப்பு ரயில்கள் ரெடி!

velangkanni

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

crowdtrain

* சென்னை எழும்பூர்-வேளாங்கண்ணி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

* வேளாங்கண்ணி-சென்னை எழும்பூர் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

* சென்னை சென்டிரல்-வேளாங்கண்ணி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

* வேளாங்கண்ணி- சென்னை சென்டிரல் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

* எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

* வேளாங்கண்ணி-எர்ணாகுளம் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

* நாகர்கோவில்-வேளாங்கண்ணி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

* வேளாங்கண்ணி-நாகர்கோவில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

* சென்னை எழும்பூர்-நாகப்பட்டினம் இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகப்பட்டினத்தை சென்றடையும்.

* வேளாங்கண்ணி-பாந்த்ரா இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, 31-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு பாந்த்ராவை சென்றடையும்.

இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Leave a Response