கறிக்காக மான் வேட்டை: பிடிபட்ட கும்பல்!

maan
கோவை, மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்குட்பட்ட இருளர்பதியில் புள்ளிமான் கறி விற்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காரமடை வனப் பணியாளர்கள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது புள்ளிமான் கறி விற்கப்படுவதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, இருளர்பதியைச் சேர்ந்த குமார், கார்த்திக், சந்திரன், லிண்டேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், “புள்ளி மான்கள் அதிகமாக உலவக்கூடிய பகுதி இது.

இங்கு மான்களை பிடித்து வெட்டி கறிகளாக விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு கிலோ மான் கறி 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரையில் விலை போகிறது. மான் கொம்பு உள்ளிட்ட சில பொருள்கள் அழகுக்காக பயன்படுத்தப்படுகிறது. மான் வேட்டையைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்” என்றார்.

Leave a Response