எந்த நேரத்திலும் காதல் வரும்! – திரை விமர்சனம்…

Yendha-Nerathilum-movie

நாயகன் ராமகிருஷ்ணன் கோத்தகிரி அருகே அவரது அப்பா, அக்கா சாண்ட்ரா ஏமி, மாமா யாஷ்மித் என அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நாயகி லீமா பாபு. லீமாவை சந்தித்த முதல் பார்வையிலேயே ராமகிருஷ்ணனுக்கு காதல் வந்து விடுகிறது. இதையடுத்து தனது காதலை லீமாவிடம் தெரிவிக்க, லீமாவும் ராமகிருஷ்ணனின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார்.

இதையடுத்து லீமாவை தனது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் ராமகிருஷ்ணன், லீமாவை முதலில் தனது அக்கா சாண்டாராவிடம் கூட்டிச் செல்கிறார். லீமாவை பார்த்து அதிர்ச்சியடைந்த சாண்ட்ரா, லீமாவிடம் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகிறாள். இதையடுத்து லீமாவை தனது வீட்டிற்கே ராமகிருஷ்ணன் கூட்டிச் செல்கிறார்.

அங்கு லீமாவை பார்த்த ராமகிருஷ்ணன் வீட்டார் அனைவருமே அதிர்ச்சிக் உள்ளாகின்றனர். மேலும் அனைவருமே லீமாவிடம் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் ஏன் லீமா பார்த்து அதிர்ச்சியடைகின்றனர் என்ற காரணம் தெரியாமல் ராமகிருஷ்ணன் விழித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சாலை விபத்து ஒன்றில் ராமகிருஷ்ணனின் அப்பா மற்றும் மாமா யாஷ்மித் இறந்துவிடுகின்றனர். இதனால் தீராத மனவேதனையில் இருக்கும் சாண்ட்ரா, ராமகிருஷ்ணன் மற்றும் தனது மகளை கூட்டிக்கொண்டு அவர்களது பூர்வீக வீட்டிற்கே திரும்ப சென்று விடுகிறார். அந்த வீட்டிக்கு சென்ற பிறகு இரவு நேரத்தில் சாண்ட்ராவுக்கு சில அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. அதில் லீமாவின் ஆவி சாண்ட்ராவுக்கு தொல்லை கொடுப்பது போன்று தோன்றுகிறது.

yentha-nerathilum

இதுபோன்ற தொல்லைகளால் அவதிப்படும் சாண்ட்ரா என்ன செய்தார்? சாண்ட்ராவை லீமாவின் ஆவி தொல்லை செய்வது உண்மையா? லீமாவை பார்த்து சாண்ட்ராவும், அவளது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து ஏன்? ராமகிருஷ்ணன் – லீமாவின் காதல் வெற்றி பெற்றதா? இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராமகிருஷ்ணன், எப்போதும் போல அலெட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். திகில் படத்திற்கு ஏற்ப அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. லீமாவுடனான காதல் காட்சிகளிலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்கே திருப்புமுனையாக லீமாவின் காட்சிகள் செதுக்கப்பட்டிருகிறது. காதல் காட்சிகளிலும், திரையிலும் லீமா அழகு தேவதையாக வந்து செல்கிறார்.

சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்திற்கு பிறகு சாண்ட்ரா எமிக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அதற்கேற்ப அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

ஒரு கதைக்குள், மற்றொரு கதையை இணைத்து அதில் திகில் கலந்த ஒரு படத்தை இயக்கியிருக்கும் ஆர்.முத்துக்குமாருக்கு பாராட்டுக்கள். படம் முழுக்க கோத்தகிரியையே சுற்றி இருப்பதால், படத்தின் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும், திரைக்கதையில் திகிலை கொஞ்சம் கூட்டியிருக்கலாம் என்பது நேயர்களின் விருப்பமாக இருக்கிறது.

பி.சதீஷின் பின்னணி இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. சாலை சகாதேவனின் ஒளிப்பதிவில் கோத்தகிரி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது. காட்சிகளும் தெளிவாக இருப்பது படத்தின் பலத்தை மேலும் கூட்டியிருக்கிறது.

Leave a Response