ஹாலிவுட் பிரமாண்டத்தில் ஆதிவாசியாக நடிக்கும் யோகிபாபு!

aram
செவன் த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் ஹாலிவுட் பிரமாண்டத்தில் வித்தியாசமான கதைகலத்தில் உறவாகும் படம் தான் இந்த “ஆறாம் வேற்றுமை” . இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக கோபிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் தற்போது காமெடியில் கலக்கி வரும் நம்ம யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப்படம் சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம். இப்படம் ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதையில் நகர்வதால் ஆறாம் வேற்றுமை என பெயர் வைத்தோம். தங்களுக்கு என்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம். நமக்கு அறிமுகமான மொழியே இல்லை இந்த படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓர் இடம் ஓர் இனம் ஓர் வாழ்க்கை என வாழத் தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ஆறாம் வேற்றுமை. மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் தான் இது.
ஆறு அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். நாகரிக வாழ்க்கையை வாழ்கிறான். அதே ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் காட்டுவாசிகளாகவும் வாழ்கிறான். இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் இல்லாத காட்டுப் பகுதியை தேடிப்பிடித்தோம். பல கிலோ மீட்டர்கள் நடந்தே போக வேண்டி இருந்தது. எல்லோருமே எங்களது முயற்சியையும் கதை பற்றிய நம்பிக்கையையும் மனதில் கொண்டு எல்லா சிரமங்களையும் பொருத்துக் கொண்டார்கள்.

இந்த திரைப்படத்தைப் பார்த்து பிடித்துப் போய் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார் ஸ்ரீ முத்தமிழ் லஷ்மி மூவி மேக்கர்ஸ் பட அதிபர் R.பாலசந்தர். படத்தின் முழு படப்பிடிப்பும் தர்மபுரி சேலம் அரூர் அதிராம்பள்ளி போன்ற
இடங்களில் உள்ள காடுகளில் நடைபெற்றுள்ளது.

ஹாலிவுட்டில் தயாராகி மாபெரும் வெற்றி பெற்ற அபகலிப்டா போன்ற படம் தான் இந்த ஆறாம் வேற்றுமை இந்த வேற்றுமையை திரையில் காண்போம்.

Leave a Response