எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் ?

mgr-13-1484320607
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அதிமுக நிறுவனரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. எனது வேண்டுகோளினை ஏற்று விரைவில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு விழாவின் பொழுது இந்த நாணயம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Response