அதிமுகவின் வெற்றியால் திமுகவிற்கும், காங்கிரசிற்கும் வயிற்றெரிச்சல் வரும் – அமைச்சர் ஜெயக்குமார்..!

அதிமுகவின் மெகா கூட்டணி வெற்றியால் திமுகவிற்கும், காங்கிரசிற்கும் தூக்கமின்மையும் வயிற்றெரிச்சலும் வரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை செனாய் நகர் திரு.வி.க. அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.92 லட்சம்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தேர்தல் அறிக்கை அடித்தட்டு மக்களை மனதில் வைத்தே கொண்டு வரப்பட்டு, வெற்றி பெற்றிருக்கிறது. அதேப்போன்று நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றியைக் கொண்டுவரும் எனநம்பிக்கை தெரிவித்தார்.

அதே போன்று தேமுதிக கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான இழுபறிக்கு சுமூக முடிவு எட்டப்படும் என கூறினார்.

Leave a Response