சில மதங்களுக்கு முன் வந்த ரூ.2000 ரூபாய் நோட்டுக்களைத் தொடர்ந்து ரூ.200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரென்சி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்கட்டமாக ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் துவங்கப்பட்டது. 21 நாட்களில் இப்பணி முடிவடைந்தது. இதனால் அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார். மேலும் ரூ.500 நோட்டுக்களை அதிக அளவில் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.200 நோட்டு வெளியீட்டிற்கு பிறகு ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.