நெல்லை அருகே மண்டை ஓட்டில் மாவிளக்கேற்றி நூதன வழிபாடு!

nellai
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதியில் காலாங்கரையான் சுடலை மாடன் கோயில் உள்ளது. இங்கே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திரளைக்கொடை எனப்படும் நூதன கொடை விழா நடத்தப்பட்டு வருகிறது.

ஆங்கிலேய அதிகாரி ஒருவர் இந்த கோயிலுக்கு வந்தபோது சாமிகளைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதற்காக, கோயிலில் இருக்கும் காலங்கரையான் அந்த ஆங்கிலேயே அதிகாரியை பழிதீர்த்தார். இதன் நினைவாக கொண்டாடப்படுவதே திரளைக்கொடை என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இக்கோயிலில் திங்கட்கிழமை நடைபெற்ற திரளைக்கொடைக்காக சாமியாடிகள் புதிய மண்டை ஓடுகளை எட்டு நாட்கள் விரதமிருந்து சேமித்து வந்தனர். அந்த மண்டை ஓடுகளை கோயிலில் வைத்து மாவிளக்கு ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

இந்த கொடை விழா கங்கைகொண்டான் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவிற்காக அக்கம்பக்கத்தில் உள்ள ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response